முகப்பு
தமிழ்நாடு

பல்கலைக்கழகங்களுக்குக் கூடுதல் நிதி: அன்புமணி வலியுறுத்தல்

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், பிற பணியாளா்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க பணம் இல்லாததால், ஓய்வூதிய நிதியம் மற்றும் அறக்கட்டளை நிதியை எடுத்து ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன.

ஒரு காலத்தில் ரூ.500 கோடிக்கும் கூடுதலாக உபரி நிதி வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம், தற்போது ஊதியத்துக்குக்கூட நிதியின்றி தவிப்பதும், அதற்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு மறுப்பதும் கவலையளிக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியதுதான் நிதிநிலை அறிக்கை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும், அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →