திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி 
தமிழ்நாடு

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக ரா.மகேஷ்வரி பணியாற்றி வருகிறார். இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 12 ஆவது கிராஸ் பகுதியில் தற்போது குடியிருந்து வருகிறார். 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்தற்கு முன்பு, சென்னையிலுள்ள உள்ளாட்சிகள் முறைமன்ற நடுவத்தில் இணை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். அதற்கு முன்னதாக காஞ்சிபுரம், தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக பணியாற்றினார். 

இந்த நிலையில், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது, அத்திவரதர் திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

இதனையொட்டி, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த சிறப்பு நிதியை செலவிட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக ஆணையராக இருந்த மகேஷ்வரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் புகாரின் பேரில் தான் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த நிலையில், திண்டுக்கல்லில் வசித்து வரும் மகேஷ்வரி வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சேதானை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT