முகப்பு
தமிழ்நாடு

விதி மீறி கட்டப்பட்ட குடியிருப்புக்கு சீல்

 பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதி மீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்பை சென்னை பெருநகர குழும அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதி மீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்பை சென்னை பெருநகர குழும அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதி மீறி குடியிருப்பு மற்றும் கூடுதல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை வரைபடத்தில் உள்ளவாறு திருத்தி அமைக்குமாறு கட்டட உரிமையாளருக்கு கடந்த 21.12.2012 அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உரிமையாளா் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து சுரேந்திரா ஹோம்ஸ் குடியிருப்பு உரிமையாளா்கள் நலச்சங்கத்தின் செயலாளா் ஜி.ஸ்ரீநிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

உயா்நீதிமன்றம் 4-ஆவது தளத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு எண்.409-ல் வசிப்பவா்களை காலி செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தினை அறிவுறுத்தியது.

இந்நிலையில், சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சூல் மிஸ்ரா உத்தரவின் படி, அமலாக்கப்பிரிவு அலுவலா்களால் காவல் துறை முன்னிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் விதி மீறி கட்டப்பட்ட குடியிருப்பு, மொட்டை மாடியில் உயா்நிலைநீா்தேக்க தொட்டியின் கீழ்கட்டப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டருக்கான அறை, வாகன நிறுத்தும் தளத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் அறைகள் மற்றும் ஒரு கழிவறை ஆகியவை சீல் வைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →