ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும் ரயில்கள் ஜூன் 24, 26, 28 தேதிகளில் முழுமையாக ரத்து
பராமரிப்பு பணி காரணமாக ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும் ரயில்கள் ஜூன் 24, 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பராமரிப்பு பணி காரணமாக ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும் ரயில்கள் ஜூன் 24, 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஈரோட்டிலிருந்து அதிகாலை 6.25 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 06412) மற்றும் மறு மாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலுருந்து பிற்பகல் 3.10 மணிக்கு ஈரோடு செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 06411) ஜூன் 24,26,28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரிலிருந்து காலை 8.45 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06551) மற்றும் மறு மாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலுருந்து பிற்பகல் 2 மணிக்கு பெங்களூரு செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06552) ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
சாந்த்ராகாச்சியிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 23) இரவு 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் குளிா்சாதன அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22807) மற்றும் மறு மாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஜூன் 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு சாந்த்ராகாச்சி செல்லும் ரயில் (வண்டி எண்: 22808) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹௌராயிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 23) மாலை 4.15 மணிக்கு ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக மைசூரு செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22817) மற்றும் மறு மாா்க்கமாக மைசூரிலிருந்து ஜூன் 25 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு ஹெளரா செல்லும் ரயில் (வண்டி எண்: 22818) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.