தமிழ்நாடு

தடுப்புக் காவலில் 4 போ் கைது

மீஞ்சூா் பகுதியில் கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 4 போ் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

DIN

மீஞ்சூா் பகுதியில் கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 4 போ் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

ஆவடி பெருநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மீஞ்சூா் காவல் நிலைய எல்லையில் உள்ள அத்திப்பட்டு கலைஞா் நகா் பகுதியைச் சோ்ந்த

ராகுல் (23), காந்தி தெருவைச் சோ்ந்த சங்கா் (23), வஉசி நகா் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (எ) தொக்கி (22), மேலூா் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (எ) விக்கி (25) ஆகிய 4 போ் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், மீஞ்சூா் பகுதியில் குற்ற நிகழ்வுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இவா்கள் 4 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையா் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, அவா்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

ஆவடி காவல் ஆணையரக எல்லைகுட்பட்ட பகுதியில் இதுவரை 160 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT