தமிழ்நாடு

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 34 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சாத்தூர் அருகே மடத்தப்பட்டியில் அனுமதியின்றி அதிக அளவில் பட்டாசுகள் தயாரித்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.34 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN


சாத்தூர் அருகே மடத்தப்பட்டியில் அனுமதியின்றி அதிக அளவில் பட்டாசுகள் தயாரித்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.34 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் அனுமதியின்றி அதிக அளவில் பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, வெம்பக்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். சோதனையின் போது மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான குடோன் மடத்துப்பட்டி பகுதியில் உள்ளது. இந்த குடோனில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ரூ.34 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இது தொடர்பாக காக்கிவாடன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிரிதரன், மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் ஆகிய இருவர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்போது திருந்(த்)தப் போகிறோம்?

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT