தமிழ்நாடு

இளைஞர்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும்: நடிகர் கார்த்தி அறிவுரை

இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும்

DIN

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றும் இளைஞர்கள் போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும் என நடிகர் கார்த்தி வலியுறுத்தினார். 

சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக காவல்துறையினர் சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துக் கொண்டார். 

நடிகர் கார்த்தி பேசியதாவது:
”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.

பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும். இது சீரியஸான விஷயம். 

போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” என்று கார்த்தி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்கந்தர் தோல்விக்குக் காரணம் சல்மான் கான்: ஏ. ஆர். முருகதாஸ்

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி!

ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!

இது நல்லா இருக்கே...! “போர் நடந்தால் தேர்தல் தேவையில்லையா?” வைரலாகும் டிரம்ப்பின் விடியோ

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

SCROLL FOR NEXT