முகப்பு
தமிழ்நாடு

மணப்பாறை அருகே அரசுப் பேருந்து-கார் மோதல்: 5 பேர் பலி

மணப்பாறை அருகே கல்கொத்தனூரில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டதில் 5 பேர் பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
பகிர்:

மணப்பாறை அருகே கல்கொத்தனூரில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டதில் 5 பேர் பலியாகினர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்கொத்தனூர் என்ற திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அரசுப் பேருந்து மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.

இதில் 5 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →