பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு!
மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதால், பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதால், பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.
சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
Advertisement
மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதால், பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானாலும், கலந்தாய்வு இன்னும் தொடங்கவில்லை.
மருத்துவத்தை படிக்க விரும்பும் மாணவர்கள் பொறியியலில் சேர்ந்து, பின் விலகுவது அவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.
எனவே மருத்துவ கலந்தாய்வு முதல் கட்டம் தொடங்கிய பின் பொறியியல் கலந்தாய்வை தொடங்கலாம் என ஆலோசிக்கிறோம் என்று அமைச்ச்ர் பொன்முடி தெரிவித்தார்.
இதையும் படிக்க: பொறியியல் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு!