தமிழ்நாடு

பொறியியல் தரவரிசையில் திருச்செந்தூர் மாணவி மாநில அளவில் முதலிடம்!

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா பொறியியல் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதடை படைத்துள்ளார்.

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா பொறியியல் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதடை படைத்துள்ளார். மேலும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த கல்வியாண்டில் இப்பள்ளி மாணவி பா.நேத்ரா 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.  மாணவி பெற்ற மதிப்பெண்கள்  விபரம் : தமிழ்    99, ஆங்கிலம் 99, இயற்பியல்     100, வேதியியல் 100, கணினி அறிவியல்    100, கணிதம்    100 ஆகும். 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட பொறியியல் தரவரிசையில் மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 

மாணவிக்கு பள்ளி தாளாளர் மருத்துவர் அ.ராமமூர்த்தி, முதன்மை முதல்வர் இரா.செல்வவைஷ்ணவி, முதல்வர் ஜீனத் மற்றும் ஆசிரியர்கள். பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT