தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: மணப்பாறையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகை நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் மணப்பாறை சந்தையில் புதன்கிழமை சுமாா் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். 

DIN

மணப்பாறை: பக்ரீத் பண்டிகை நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் மணப்பாறை சந்தையில் புதன்கிழமை சுமாா் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரந்திர கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. வெள்ளாடுகள், செம்மறியாடுகள் என பெரிய பெரிய ஆடுகளை இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

உலக புகழ்பெற்ற கால்நடை வாரச்சந்தையாக மணப்பாறை சந்தை திகழுகிறது. வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் மாடுகள் வர்த்தகம் நடைபெறுவது போல் லட்சக்கணக்கில் ஆடுகள் விற்பனை நடைபெறுவதும் வழக்கம். 

மணப்பாறை வேப்பிலை மரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கிடாவெட்டு நடைபெற்றது. அதற்காக ஆடுகள் அதிக அளவில் மே மாதம் முதல் வாரத்தில் விற்பனை நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து, தற்போது இஸ்லாமியர்களால் நாளை வியாழக்கிழமை (ஜூன் 29) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், புதன்கிழமை காலை கால்நடை வாரச்சந்தையில் வழக்கம்போல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. புதன்கிழமை காலையில் மந்தமாக தொடங்கிய ஆடுகள் விற்பனை, பின்னர் ஆடுகளின்  விற்பனை கிடுகிடுவென உயர்ந்து சுமார் 30 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.30 முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாயின. 

பொட்டுக் கிடா உள்ளிட்ட தரமான கிடாக்கள் விற்பனைக்கு வந்திருந்தனர். இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் ஆடுகளை தங்களது பண்டிக்கைக்காக வாங்கிச் சென்றனர். புதன்கிழமை ஒரே நாளில் சுமாா் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT