தமிழ்நாடு

நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் அனுமதி!

DIN

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணித்திருமஞ்சன தரிசன உற்சவம் முடிவுற்று இன்று புதன்கிழமை காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்று தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் ஆண்டு இருமுறை ஆனித்திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசன உத்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 25-ம் தேதி தேர் திருவிழாவும், 26-ம் தேதி திங்கள்கிழமை மகாபிஷேகம் மற்றும் ஆனித்திருமஞ்சன தரிசன உத்வம் நடைபெற்றது.

கோயிலில் தேர் மற்றும் தரிசன திருவிழாவின் போது கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கமாகும். கோயில் பொது தீட்சிதர்கள் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என பதாகை வைத்திருந்தனர். அதனை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்பு வந்து அகற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT