டேவிட்சன் தேவாசீா்வாதம் 
தமிழ்நாடு

போலி கடவுச்சீட்டு: ஏடிஜிபி டேவிட்சன் மீதான புகாரை விசாரிக்க உத்தரவு!

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான போலி கடவுச்சீட்டு புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான போலி கடவுச்சீட்டு புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது, போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக கடந்தாண்டு புகார் எழுந்தது.

இந்த சம்பவத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்தில் வராகி என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் டேவிட்சன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், உளவுத்துறை ஏடிஜிபி பதவியில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தமிழக காவல்துறை தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டு நேற்று உத்தரவிடப்பட்டது.

மேலும், போலி கடவுச்சீட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் டேவிட்சனிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT