தமிழ்நாடு

இணையத்தில் டிரெண்டாகும் ஆளுநரே வெளியே போ ஹேஷ்டேக்!

DIN

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக  கவர்னரே வெளியே போ என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவை பதவியிலிருந்து நீக்குவதாக நேற்று (ஜூலை 29) இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்திருந்தார். பின்னர் 5 மணிநேரத்தில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் தெரிவித்தார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவழக்குகளில் சிக்கியுள்ளதால், அவர் அமைச்சரவை பதவியில் நீடித்தால் அமலாக்கத் துறை விசாரணை பாதிக்கப்படும் எனக்கூறி அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக ஆளுநர் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் நடவடிக்கைக்கு ஆளும் கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அமைச்சரை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்திய அரசியலமைப்புப் படி ஆளுநருக்கு அதிகாரமில்லை என அரசியல் கட்சியைச் சேர்ந்த பலர் சுட்டிக்காட்டினர்.

ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கவர்னரே வெளியே போ (#getoutgovernor) (#கவர்னரேவெளியேபோ) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

ஆளுநர் - செந்தில் பாலாஜி விவகாரத்தில் பலர் டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக்கை பதிவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதால் டிரெண்டாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

SCROLL FOR NEXT