முகப்பு
தமிழ்நாடு

'முதல்வர்களில் முதன்மையானவர்' - மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

முதல்வர்களில் முதன்மையானவர் என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
பகிர்:

முதல்வர்களில் முதன்மையானவர் என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், ' முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், மு.க. ஸ்டாலின் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →