சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல மார்ச் 4 - 8 வரை அனுமதி!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சனிக்கிழமை (மார்ச் 4ஆம் தேதி) பிரதோஷமும், (மார்ச் 7ஆம் தேதி)செவ்வாய்க்கிழமை பௌர்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன.

DIN


ஸ்ரீவில்லிபுத்தூர்: மார்ச் 1 மாசி மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்குச் செல்ல (மார்ச் 4 முதல் மார்ச் 8 )வரை 5 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சனிக்கிழமை (மார்ச் 4ஆம் தேதி) பிரதோஷமும், (மார்ச் 7ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை பௌர்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 8 தேதி வரை 5 நாள்கள் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

இதில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுகுள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது. கோயிலுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவர்.

அதேபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோயிலுக்கு வருபவர்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்க கூடாது. கோயிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர் வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT