பண்ருட்டி ராமச்சந்திரன் 
தமிழ்நாடு

அரவணைத்துச் செல்லாததே அதிமுக வீழ்ச்சிக்கு காரணம்: ஓபிஎஸ் தரப்பு

ஆவணப்போக்கு, சர்வாதிகாரப்போக்கு, யாரையும் அரவணைத்து செல்லாததாதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

DIN

ஆவணப்போக்கு, சர்வாதிகாரப்போக்கு, யாரையும் அரவணைத்து செல்லாததாதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமியை முன்னிருத்தி நடைபெற்ற தேர்தல்களிலெல்லாம் தோல்வியையே அதிமுக சந்தித்துள்ளது. இப்போது கட்சியையும் இழந்துவிடுவோமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

அதிமுக எல்லோருக்கான கட்சி. எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. யார் ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை அதிமுக தொண்டர்கள் தூக்கி வீச வேண்டும். 

தேர்தல் முடிவுகளில் அதிமுகவின் நிலையால் மன வேதனை அடைந்தேன். டெபாஸின் இழந்துவிடுவோமோ என்ற கவலை ஏற்பட்டது. அதிமுக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT