தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் முன்னிலை: திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த திங்கள்கிழமை(பிப். 27) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ். இளங்கோவன் 39 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். 

அதிமுக வேட்பாளர் தென்னரசு 13,500 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 1,800 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும், தேமுதிகவின் எஸ்.ஆனந்த் 220 வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். 

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதையொட்டி திமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT