தமிழ்நாடு

ஒரு லட்சம் வாக்குகள் பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த திங்கள்கிழமை(பிப். 27) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ். இளங்கோவன் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். 

14 ஆவது சுற்று முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,03,769 வாக்குகள் பெற்றுள்ளார். 

அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,268 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 7,984 வாக்குகளும் தேமுதிகவின் எஸ்.ஆனந்த் 949 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT