தமிழ்நாடு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். 

DIN

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 8 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 17,417 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,598 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 585 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறார். 

திமுக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், தேர்தல் நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். 

அப்போது, திமுக அரசு 5 ஆண்டுகளுக்கு கொடுத்த உறுதிமொழியை இதுவரை ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேலான உறுதிமொழிகளை நிறைவேற்றியுள்ளது. 

நாங்கள் ஒரு கொள்கை சார்ந்த அரசியல் இயக்கமாக இருக்கிறோம். எங்களை எதிர்த்து நிற்கும் அதிமுக சஞ்சலத்தில் உள்ளது. அவர்களால் அவர்களுடைய அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. எனவே சஞ்சலத்தில் உள்ள தன்னம்பிக்கை இல்லாத கட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அழகிரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT