ஈவிகேஎஸ் இளங்கோவன் 
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இடைத்தேர்தல் வெற்றி: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து எனது பணிகளைத் தொடருவேன் என்றார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

DIN

மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது. வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து எனது பணிகளைத் தொடருவேன். 

தேர்தல் ஆணைய நடத்தைகளில், வாக்குப்பதிவில் எந்தவித தவறும் நடைபெறவில்லை என கூறியவர் தென்னரசு. ஆனால் தற்போது பணநாயகம் வென்றதாக தோல்வி விரக்தியில் எதிர்மாறாக பேசுகிறார்.

எனது மகன் இருந்து செய்ய வேண்டிய பணிகளை தொகுதி மக்களுக்காக நான் செய்வேன். முதல்வரை விரைவில் சென்று சந்திக்க வேண்டும். மக்களவைக்கு பெரிய அணி உருவாக வேண்டும். காங்கிரஸ் இருந்தால்தான் அந்த கூட்டணிக்கு மரியாதை கிடைக்கும். மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம்தான் ஈரோடு கிழக்குத்தொகுதியில் கிடைத்துள்ள வெற்றி எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT