தமிழ்நாடு

தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர் பகுதியில் முறையான சாலை வசதி வேண்டி வ.உ.சிதம்பரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்-மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர் பகுதியில் முறையான சாலை வசதி வேண்டி வ.உ.சிதம்பரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்-மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 3 ஆவது மைல் பகுதியில் இருந்து மில்லர்புரம் வரை சாலை, புதிய பேருந்து நிலையத்திலிருந்து விவிடி சிக்னல் வரை உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மாணவர்-மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல இயலவில்லை. 

சாலை வசதி செய்துதரக் கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள்.

எனவே, சாலைகளை பராமரித்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியே வந்த மாணவர்-மாணவிகள் முறையான சாலை வசதி செய்துதரக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT