முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை: 42 ஆயிரத்தை நெருங்கியது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் 42 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் 42 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த வாரம் சரிவு ஏற்பட்ட நிலையில், மெல்ல மீண்டும் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், மார்ச் 2ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8 உயர்ந்து ரூ.5,243 ஆகவும், ஒரு சவரன் ரூ.64 உயர்ந்து ரூ.41,944-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.70.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.200 குறைந்து ரூ.70,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →