முகப்பு
தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே: முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி நம்முடைய ஒற்றுமைக்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் உருவான ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவானால் வெற்றி கிடைக்கும். 

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே, நாடும் நமதே. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். மார்க்சியம் கொள்கை பிளவுபடுத்தும் கொள்கை என்று சொல்பவர்களுக்கு தக்க பதிலடி தரும் கடமை நமக்கு உள்ளது. மதவாத, எதேச்சதிகாரம், வகுப்புவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும். 

இரும்புக்கரம் கொண்டு பிளவுபடுத்தும் சக்திகளை அடக்குவோம். சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். தமிழ்நாடு வரும் புலம்பெயர் தொழிலாளர்களிடையே கலவரம் ஏற்படுத்தி சிலர் அரசியல் லாபம் தேட நினைக்கிறார்கள்.  எவ்வளவு பிளவுபடுத்த முயன்றாலும் உங்களால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உடைக்க முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →