தமிழ்நாடு

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத் தீ

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து சாம்பலாகின.

DIN


கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து சாம்பலாகின.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மசினகு பகுதியில் மதியம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் அதனைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. வெப்பம் அதிகமாக இருந்ததால், காட்டுத் தீ மளமளவென எரிந்து பல நூறு ஏக்கர் பரப்பிலான காடுகள் சாம்பலாகின.

மரவகண்டி அணையின் கரை ஓரத்தில் உள்ள மூங்கில் காட்டில் 50 அடி உயரத்திற்கு தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீயை அணைக்க 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT