உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு 
தமிழ்நாடு

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

DIN

மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து சென்னையில் நேரில் சந்தித்து மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில்  நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23 வரை மலேசியாவில் நடைபெறும் என அண்மையில் புதிய அறிவிப்பு வெளியானது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT