சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: தலைமறைவான ஹரிஷ் உள்பட இருவர் கைது
சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திரைப்பட நடிகர் வடிவேலு, பார்த்திபன், இசையமைப்பாளர் தேவா உட்பட திரைத்துறை பிரபலங்கள் சிலருக்கு ஹரிஷ் என்பவர் தலைமையிலான தனியார் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் டாக்டர் பட்டம் வழங்கினர்.
இதுதொடர்பாக சர்ச்சை ஏற்பட்டு காவல் துறையினர் ஹரிஷ்-ஐ தேடி வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியான கருப்பையா என்பவரை சென்னை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களுக்கு ஆதரவு அளித்த ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் நடேசன் பள்ளி தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி கீர்த்திகாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் ஆம்பூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.