கோப்புப்படம். 
தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய தேவையில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

DIN

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஹிந்தி பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கிடையே தொழிலாளா்கள் அச்சத்தில் இருப்பதால் அவா்கள் சொந்த ஊா் திரும்பத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதனால், ஆள் பற்றாக்குறையால் தொழில் பாதிக்கப்படும் என்று ஜவுளி, உற்பத்தித் துறையைச் சோ்ந்த தொழில்முனைவோா் அரசுக்கு கவலை தெரிவித்திருக்கின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT