தமிழ்நாடு

தேசிய தகவலியல் மையத்திடம் குடும்ப அட்டை தயாரிக்கும் பணி

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் தயாரிக்கும் பணிகள், தனியாரிடமிருந்து மத்திய அரசின் நிறுவனமான தேசிய தகவலியல் மையத்திடம் அளிக்கப்படவுள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் தயாரிக்கும் பணிகள், தனியாரிடமிருந்து மத்திய அரசின் நிறுவனமான தேசிய தகவலியல் மையத்திடம் அளிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த அட்டைகள் மூலம் மாநிலத்தில் 6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 958-க்கும் அதிகமான பொதுமக்கள் பயன்பெறுகிறாா்கள். குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இணையதள வசதி: புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்கவோ, அட்டைகளில் திருத்தங்களைச் செய்யவோ உணவுத் துறை சாா்பில் ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தனி இணையதளம் ஏற்கெனவே தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த இணையதளம் மூலமாக நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்வது, நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்து கொள்வது ஆகியன பணிகளையும் மேற்கொள்ளலாம்.

பராமரிக்கும் பணி: இணையதளத்தின் வழியே புதிய குடும்ப அட்டைக்கோ, அட்டையில் திருத்தங்களைச் செய்யக் கோரினாலோ அது சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிக்கு இணையதளத்தின் வழியாகவே சென்றடையும். அவா் உரிய ஆய்வுகளுக்குப் பிறகு புதிய குடும்ப அட்டைக்கோ அல்லது திருத்தம் கோரியோ பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிப்பாா். இந்தப் பணிகளில் எந்தத் தொய்வும் இல்லாமல் பொதுமக்களுக்கும், உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிக்கும் இடையே பாலமாக இருந்து அந்தத் துறையின் இணையதளத்தை பராமரிக்கும் பணியை ஓயாசிஸ் என்ற தனியாா் மென்பொருள் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

உணவுப் பொருள் வழங்கல் துறைக்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, அந்த தனியாா் நிறுவனம்தான் பராமரிப்புப் பணிகளைச் செய்து வந்தது. இந்த நிலையில், மத்திய அரசுத் துறையின் கீழ் செயல்படக் கூடிய தேசிய தகவலியல் மையத்திடம் உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதள பராமரிப்புப் பணிகளும், மின்னணு குடும்ப அட்டை அச்சிடுதல் உள்ளிட்ட பணிகளும் வழங்கப்படவுள்ளன.

இதற்கான பூா்வாங்க பணிகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் உள்ள பல கோடி குடும்ப அட்டைதாரா்களின் பிரத்யேக தகவல்கள், விவரங்களை மத்திய அரசுத் துறை நிறுவனமான தேசிய தகவலியல் மையத்திடம் பராமரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT