தமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  புதிய அலுவலகக் கட்டடமான கலைவாணர் மாளிகையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

DIN

நாகர்கோவில் மாநகராட்சி கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  புதிய அலுவலகக் கட்டடமான “கலைவாணர் மாளிகையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் நகரில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிக்க.. சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (7.3.2023) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு நான்கு தளங்களுடன் 10.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடமான “கலைவாணர் மாளிகை”-யை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து முதல் மாடியில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி கூட்ட அரங்குக்குச் சென்றார். அங்கு மாநகராட்சி உறுப்பினர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். உறுப்பினர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் மேயர் அறைக்குச் சென்று
மேயர் மகேஷை இருக்கையில் அமர வைத்து மேயர் மற்றும் அமைச்சர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நாகர்கோவில், பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் அருகில் உள்ள கலைவாணர் கலையரங்க வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய அலுவலகக் கட்டடமான “கலைவாணர் மாளிகை”, கீழ் தளம் மற்றும் நான்கு தளங்களுடன் மொத்தம் 56,809 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இதில் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், ஓட்டுநர்கள் ஓய்வு அறையும், முதல் தளத்தில் மேயர் அறை, துணை மேயர் அறை, நிர்வாக பிரிவு, தகவல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவு, தாய்மார்கள் பாலுட்டும் அறை, பார்வையாளர் அறை, உணவு அருந்தும் அறை, வரவேற்பறை, வரி வசூல் மையம் ஆகியவையும், இரண்டாவது தளத்தில் ஆணையாளர் அறை, மாநகர பொறியாளர் அறை, பொறியியல் பிரிவு, விழா மண்டபம், கலந்தாய்வு அரங்கம், காணொளி காட்சி அறை ஆகியவையும், மூன்றாவது தளத்தில் மாமன்ற கூட்ட அரங்கம், நகர திட்டமிடுநர் அறை, மாநகர் நல அலுவலர் அறை, நகரமைப்புப் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு, நகரசார் அளவர் அறை ஆகியவையும், நான்காவது தளத்தில் பத்திரிக்கையாளர் அறை, வருவாய் பிரிவு, பதிவறை ஆகியவையும் அமைந்துள்ளது.

மேலும், இவ்வலுவலகக் கட்டடத்தில், தீயணைப்பு வசதிகள், கண்காணிப்பு  கேமர வசதிகள், இரண்டு மின் தூக்கிகள், குளிர்சாதன வசதி மற்றும் உயர்கூரை அமைப்புடன் கூடிய மாமன்ற அரங்கம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின் ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT