கோப்புப்படம் 
தமிழ்நாடு

பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை எப்போது? - முதல்வர் அறிவிப்பு

வரும் நிதிநிலை அறிக்கையில், பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

வரும் நிதிநிலை அறிக்கையில், பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. முன்னதாக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், கரோனா நிவாரணம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக அரசால் கொண்டு வரப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை எப்போது கிடைக்கும் என்பது பெண்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் வரும் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதுகுறித்த அறிவிப்பு இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நாளை (மார்ச் 8) உலக மகளிர் தினத்தையொட்டி, வாழ்த்துச் செய்தியில் முதல்வர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

பெண்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதைக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், 'அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

SCROLL FOR NEXT