தமிழகத்தில் மார்ச் 10-ல் சிறப்பு காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது.
இந்தியா முழவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் உயிரிழப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவது இல்லை.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்: ஹைலைட்ஸ் விடியோ
முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கரோனா வழிகாட்டுதலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.