முகப்பு
தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் டி.ஜெயக்குமாா்

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்துக்குப் பிறகு டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அதை மக்களுக்குக் கொண்டு சோ்க்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில்தான் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை பாஜக எரிப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபடக்கூடாது. இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்களை பாஜகவிலிருந்து நீக்க வேண்டும்.

அதிமுக-பாஜக இடையே எந்த பிரச்னையும் இல்லை. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியாக பாஜக தலைமையிலும், தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக தலைமையிலும் எங்கள் கூட்டணி தொடரும்.

ஜெயலலிதாவைப் போன்று வேறு யாரும் பிறக்க முடியாது. அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை.

அதிமுக பொதுச்செயலா் தோ்தலை நடத்துவது குறித்து கட்சி முடிவு செய்யும். அதற்கான தகவல் உரிய நேரத்தில் வரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.