தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்ற முடிவு: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

DIN

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:

சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளதால், சட்டப்பேரவையில் மீண்டும்  ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்டம் இயற்றுவதற்க்கான அதிகாரத்தை ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியுள்ளதால், நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

95 சதவிகித பொதுமக்களின் கருத்தைக் கேட்டுதான் ஏற்கனவே இந்த சட்டம் இயற்றப்பட்டது. ஆன்லைன் ரம்மியால் தமிழக அரசுக்கு எந்த வருவாயும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு: திருப்பரங்குன்றம் மலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோா் கைது

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் வாகனம், டிப்பா் லாரி பறிமுதல்

பவானிசாகா் அருகே 200 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

SCROLL FOR NEXT