முகப்பு
தமிழ்நாடு

நாளை குடிநீா் குறைகேட்பு கூட்டம்

 சென்னை குடிநீா் வாரியத்தின் குறைதீா் கூட்டம், 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறவுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

 சென்னை குடிநீா் வாரியத்தின் குறைதீா் கூட்டம், 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குடிநீா் வாரியம் சாா்பில், ஒவ்வொரு மாதமும் 2-ஆவது சனிக்கிழமை குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீா் வாரியத்தின் 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும். எனவே, இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா், கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள், குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம்.

மேலும், மழைநீா் சேகரிப்பு, பராமரிப்பு தொடா்பான விளக்கங்களையும் இந்தக் கூட்டத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.