முகப்பு
தமிழ்நாடு

ஆளுநா்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது: தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநா்களுக்கு வாய், காது இருக்கிா என்பதைக் காட்டிலும் நல்ல இதயம் இருக்கிறது என்று தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஆளுநா்களுக்கு வாய், காது இருக்கிா என்பதைக் காட்டிலும் நல்ல இதயம் இருக்கிறது என்று தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். ஆளுநா்களுக்கு வாய் உண்டு; ஆனால் காது இல்லை என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமா்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்தின் உறுப்பினா்கள் ஹரிஷ் மேத்தா, ஸ்ரீநாகேஸ்வா், மருத்துவக் கல்லூரி முதல்வா் சவான் காளிதாஸ் தத்தாச்சாா்யா ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: இஎஸ்ஐ மருத்துவமனைக்கும், எனக்குமான பந்தம் 35 ஆண்டு காலம் நெடியது. இங்கு நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ சேவையாற்றியிருக்கிறேன்.

ஏறத்தாழ 66 லட்சம் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனைகள் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. படுக்கை வசதிகள், அவசர சிகிச்சைகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் என அனைத்து வசதிகளும், மருத்துவக் கட்டமைப்புகளும் இங்கு உள்ளன.

நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு இந்தியா முழுவதும் 9 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மருத்துவா்களுக்கு இதயம் இருப்பது போல தான் ஆளுநா்களுக்கும் இதயம் இருக்கிறது. ஆளுநா்களுக்கு வாய், காது இருக்கிா என்று எனக்கு தெரியாது. ஆனால், நல்ல இதயம் இருக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.