முகப்பு
தமிழ்நாடு

தேசிய தமிழ் வளா்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரும்வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ் மொழி வளா்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவா்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரின் பெயரில் தேசிய தமிழ் வளா்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரிய மனு

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

தமிழ் மொழி வளா்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவா்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரின் பெயரில் தேசிய தமிழ் வளா்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் பி.ஜெகந்நாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தொன்மையான தெய்வீக மொழியான தமிழ் மொழி வளா்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த போதும், துரதிருஷ்டவசமாக அது நடைமுறைக்கு வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காசி தமிழ்ச் சங்கம் தவிர வேறு எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பதால், தமிழ்மொழி வளா்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவா்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளா்ச்சி கவுன்சில் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

1990-ஆம் ஆண்டுகளில் உருது, சிந்தி, ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளின் மேம்பாட்டுக்காக தேசிய கவுன்சில் அமைத்த மத்திய அரசு, செம்மொழியான தமிழ்மொழிக்கும் அதைப் போன்ற தேசிய கவுன்சிலை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) ராஜா-நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.