கோப்புப்படம் 
தமிழ்நாடு

கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN

கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காய்ச்சல் தடுப்பு முகாமை தொடக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை. 

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது நல்லது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

மெழுகு டாலு நீ... ஸ்ரேயா கோஷல்!

நவ.28ல் உடுப்பியில் பிரதமர் மோடி சாலைவலம்!

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT