கரோனா பாதிப்பு விகிதம் அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு விகிதம் தற்போது ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு விகிதம் தற்போது ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.
அதன்படி, 3 ஆயிரம் பரிசோதனைகளில் 36 பேருக்கு புதிதாக வெள்ளிக்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 10 பேருக்கும், கோவையில் 9 பேருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 214 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 24 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.