முகப்பு
தமிழ்நாடு

மாா்ச் 24-இல் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம்

சென்னையில் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

சென்னையில் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை தியாகராயா் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாா்ச் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அஞ்சல் குறைகேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் தங்கள் கையொப்பமிட்ட விவரங்கள் மற்றும் குறைகளை அந்தந்த பகுதிகளுக்குள்பட்ட அஞ்சல் அலுவலக முகவரிக்கு பதிவுத் தபால், பாா்சல், காப்பீடு, மணியாா்டா், அனுப்புநா் மற்றும் பெறுநா் முகவரிகள் உள்ளிட்ட தகவல்களுடன் அனுப்பலாம்.

இதில், பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு பணப்பரிவா்த்தனை சான்றிதழ் தொடா்பான புகாா்களையும் அனுப்பலாம். இப்புகாா்களை அஞ்சல் நிலையங்களுக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.