ஈரோடு பேருந்து, ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!
ஈரோடு பேருந்து, ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு பேருந்து, ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து வெடிகுண்டு சோதனை கருவிகள் மற்றும் மோப்ப நாயுடன் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஈரோடு காவல் துறையினர் சந்தோஷ் குமார் என்பவரை திருப்பூரில் மாவட்டத்தில் கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
சந்தோஷ் குமார் ஏற்கனவே இதேபோல் மிரட்டல் விடுத்த வழக்குகளில் 2 முறைக்கு மேல் சிறைக்கு சென்றவர் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.