தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 640 உயர்வு!
சென்னையில் ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை மீண்டும் 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சென்னையில் ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை மீண்டும் 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த மார்ச் 6 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் சற்று குறைந்தது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 42,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.5,270 -க்கு விற்பனை ஆகிறது.
அதேநேரம், வெள்ளியின் விலை ரூ. 1.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.68.70- க்கும், ஒரு கிலோ ரூ.68,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | பொதுத்தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!