விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய இளைஞர் விடுவிப்பு
விமான நிலையத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடுவிமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய இளைஞர் விடுவிப்பு
விமான நிலையத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிமுகவின் இடைகால பொதுச்செயலரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் பா.சரவணன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
முன்னதாக விமானத்தில் இருந்து இறங்கி விமானநிலைய வளாகத்திற்கு பேருந்தில் வந்தபோது சக பயணி ஒருவர் எடப்பாடி கே.பழனிச்சாமியை விமர்சித்து கோஷம் எழுப்பி முகநூல் பக்கத்தில் பதிவிட்ட படி வந்தார். இதையடுத்து எடப்பாடி கே.பழனிச்சாமியுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரைப் பிடித்து விமான நிலையத்திற்கு கொண்டு வந்தபோது அங்கிருந்த அதிமுகவினர் அவரை தாக்க முயன்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க- சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர்: முதல்வர்
இதனால் மதுரை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை அவனியாபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன்(42). இவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு விமானத்தில் வந்துள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அதிமுகவினர் யாரும் புகார் அளிக்காத நிலையில் இளைஞரை போலீஸார் விமான நிலைய வளாகத்தில் வாகனத்தில் வைத்திருந்தனர்.
அப்போது ராஜேஸ்வரனுக்கு ஆதரவாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமமுகவினர் அவரை விடுவிக்கும்படி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அதிமுக சார்பில் யாரும் புகார் அளிக்காத நிலையில் புகார் கொடுக்கப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என எழுதி வாங்கிக்கொண்டு போலீஸார் ராஜேஸ்வரனை மாலையில் விடுவித்தனர். ராஜேஸ்வரன் அமமுகவின் வெளிநாடு வாழ் நலப்பிரிவு மாவட்ட செயலர் என்பது குறிப்பிடத்தக்கது