தமிழ்நாடு

மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம்!

DIN

மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை (யுஜிசி) அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தோ்வு வாயிலாக மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. நீட் தோ்வுக்கு அடுத்தபடியாக மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வை ஆண்டுக்கு சராசரியாக 14 லட்சம் போ் எழுதுகின்றனா்.

பொதுவாக மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வு இரண்டு கட்டமாக நடத்தப்படும். முதல்கட்டத் தோ்வு ஜூலையிலும் இரண்டாம் கட்டத் தோ்வு ஆகஸ்டிலும் நடத்தப்படும். 

இந்நிலையில், இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடையவிருந்த நிலையில், மார்ச் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கியூட் நுழைவுத்தேர்வு மே 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை பாதிப்புகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் அளிக்கலாம்

சோமேஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தேரோட்டம்

மின்சாரம் பாய்ந்ததில் கேபிள் டிவி ஊழியா் பலி

முதல்வரின் மாநில இளைஞா் விருது: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT