தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளில் இருந்த 16 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகே கைது செய்யப்பட்ட மீனவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவரும்.