முகப்பு
தமிழ்நாடு

ஒருங்கிணைப்பாளா் பதவி காலாவதி ஆகிவிட்டதா? ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க உயா்நீதிமன்றம் அனுமதி

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்புக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்புக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

23.6.2022-இல் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினா் சண்முகம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரப்பில், ‘இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டன’ என வாதிடப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஓ.பன்னீா்செல்வம் தரப்பு வழக்குரைஞா் ராஜலட்சுமி, ‘ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில்தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதி, விசாரணையை மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →