கோப்புப் படம் 
தமிழ்நாடு

மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து.. இதுவரை ரூ.6 கோடி வசூல்!

சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகளில், கடந்த 7 வாரத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

DIN


சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகளில், கடந்த 7 வாரத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்தில் சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தில் சிக்கியவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அவர்கல் அபாரதம் செலுத்துவதில்லை. இதனால் வழக்குகள் நிலுவையில் தேங்கும் சூழல் ஏற்பட்டது. 

அதற்காக அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வழக்குகள் முடித்துவைக்கப்பபட்டு வருகின்றன. 

கடந்த ஆறு வாரங்களில் அழைப்பு மையங்களின் இதே போன்ற நடவடிக்கைகளால் 4.922 வழக்குகள் தீர்க்கப்பட்டு. ரூ.5,09,16,000 அபராதம் தொகை செலுத்தப்பட்டன.

ஏழாவது வாரத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.5,93,78,500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT