ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணக் குறும்பட தம்பதி பொம்மன் - பெள்ளி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புதன்கிழமை வாழ்த்து பெற்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாக பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றிய "தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது பெற்றது.
இந்த படம் மூலம் பொம்மன், பெள்ளி தம்பதியை உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதையும் படிக்க | லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்!
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த பொம்மன் - பெள்ளி தம்பதியினர் வாழ்த்து பெற்றனர். இவர்கள் இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து கெளரவித்ததுடன் பரிசுத் தொகையாக தலா ரூ. ஒரு லட்சம் வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோ உடனிருந்தனர்.
மேலும், இந்த ஆவணப் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற உதகையை சேர்ந்த இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங் ஆகியோரும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.