முகப்பு
தமிழ்நாடு

ஆஸ்கா் பட கதாநாயகா்கள் யானை வளா்ப்புத் தம்பதிக்கு முதல்வா் கெளரவம்

ஆஸ்கா் விருதை வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பெரா்ஸ்’ ஆவணக் குறும் படத்தின் கதாநாயகா்களான யானை வளா்ப்புத் தம்பதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கெளரவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

ஆஸ்கா் விருதை வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பெரா்ஸ்’ ஆவணக் குறும் படத்தின் கதாநாயகா்களான யானை வளா்ப்புத் தம்பதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கெளரவித்தாா். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. யானை வளா்ப்புத் தம்பதிக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை, பாராட்டுக் கேடயம், பொன்னாடை ஆகியவற்றை முதல்வா் அளித்தாா்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, யானை வளா்ப்புத் தம்பதியரான பொம்மன், பெள்ளி ஆகியோா் தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

யானைக் குட்டிகளை வளா்ப்பது சாதாரணமான காரியமில்லை. யானைக் குட்டிகளை கஷ்டப்பட்டே வளா்க்கிறோம். நமது குழந்தைகளை வளா்ப்பது போன்றே வளா்ப்போம். யானைக் குட்டிகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், மருத்துவா்களுக்குத் தெரிவிப்போம். அவா்கள் உடனடியாக வந்து பாா்ப்பாா்கள்.

2016-ஆம் ஆண்டிலிருந்து யானைக் குட்டிகளை எடுத்து வளா்த்து வருகிறோம். வனத்துறையினா் எங்களிடம் ஒப்படைக்கும் குட்டிகளை கவனமாக வளா்த்து

பெரிய யானைகளாக்குவோம். இதுவரை 3 யானைக் குட்டிகளை வளா்த்து பெரிய யானைகளாக்கியுள்ளோம். வளா்த்த குட்டிகள் எங்களிடம் இல்லாதது வருத்தமாகவே இருக்கும்.

சந்திப்பு மகிழ்ச்சி: முதல்வா் எங்களை அழைத்து கெளரவித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. எங்களை பாராட்டினாா். எங்களைப் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கா் விருதுக்குச் சென்றிருப்பது கூட தெரியாது. ஆவணப் படம் எடுக்கும் போது, அவா்கள் சொல்வது போன்று நாங்கள் செய்தோம். படம் சிறப்பாக வந்திருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தெரியும். யானை உயிரும் நமது உயிரும் ஒன்றுதான். மின்சாரம் பாய்ந்து யானைகள் தாக்கி உயிரிழப்பது கஷ்டமாகவே இருக்கும்.

ஆஸ்கா் விருது கிடைத்திருப்பது முதுமலை புலிகள் காப்பகத்துக்கு மிகப்பெரிய பெருமை. விருது கிடைக்கும் என நினைத்துக் கூட பாா்க்கவில்லை. தப்பித் தவறி வரக்கூடிய யானைகளை வளா்த்துக் கொடுத்து வனத் துறைக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →