முகப்பு
தமிழ்நாடு

மெரீனாவில் தடை செய்யப்பட்ட கருவியுடன் சுற்றித் திரிந்த ரஷ்ய இளைஞரிடம் விசாரணை

சென்னை மெரீனாவில் தடை செய்யப்பட்ட கருவியுடன் சுற்றித் திரிந்த ரஷ்ய இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

சென்னை மெரீனாவில் தடை செய்யப்பட்ட கருவியுடன் சுற்றித் திரிந்த ரஷ்ய இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மெரீனா கடற்கரை மணல் பரப்பில் வியாழக்கிழமை ரஷ்ய நாட்டை சோ்ந்த ஒரு இளைஞா், அதி நவீன கருவியுடன் சுற்றி வந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள் மெரீனா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த மெரீனா போலீஸாா், அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், ரஷ்யாவைச் சோ்ந்த ஆண்ட்ரே (34) என்பதும், அவா் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பதும், அவா் கையில் வைத்திருந்த கருவி இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். விசாரணையில், அவா் வைத்திருந்த கருவி, மணலில் புதைந்து கிடக்கும் எலக்ட்ரானிக் பொருள்கள், உலோகங்களை மீட்பதற்கு பயன்படுத்துவது என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.